districts

img

வரலாற்றுச் சின்னத்தை அவமதிக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி,பிப்.8- தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலை யம் நான்கு சாலை சந்திப்பில் இருந்த மிகப் பழைய வரலாற்று சின்ன மான மணிக்கூண்டு சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது. நான்கு புறமும் சுதந்திரப் போராட்டத்தின் உந்து சக்திகளான  மகாத்மா காந்தி, வேலு நாச்சியார், கட்டபொம்மன், சுபாஷ் சந்திர போஸ்  உருவங்கள் அமைக்கப் பட்டுள்ளது. சமீப காலமாக இந்த மணிக்கூண்டின் கீழ் திண்ணையில் அமர்ந்து இரவில் சமூக விரோதிகள் மது அருந்தி வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் வரலாற்றுச்சின்னத்தை அவ மதிக்கும் தவறான பலசெயல்கள் இங்கு நடப்பதாக பொதுமக்கள் புகார்  தெரி வித்துள்ளனர். இதன் எதிரில் காவல் நிலையம் இருந்தும் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதும் இத னால் ஊக்கமடைந்த சமூக விரோதிகள் நினைவு சின்ன மான மணிக்கூண்டை பாழ்படுத்தி வருகின்றனர்.  தேன்கனிக்கோட்டை வட்டத்திலும், நினைவுச்சினத்திலும் தொடரும் சமூகவிரோதிகளின் அட்டகாசத்தை கண்டுகொள்ளாத காவல்துறையின் மீதும்,சமூக விரோதிகள் மீதும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தேன்கனிக்கோட்டை, தளி ஒன்றிய குழுக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;