கிருஷ்ணகிரி,அக்.5- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தொட்டள்ளா நீர்த்த திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் போதிய குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டையில் துவங்கி ஓசூர் தாலுகா அலுவலகம் வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வூ தியர்கள் சங்க மாவட்டத் தலைவர் துரை தலைமை தாங்கினார் .செயலாளர் முருகன், பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சீனிவாசலு, வெங்கடேஷ், கெம்ப்பண்ணா, நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.முடிவில் ஓசூர் . வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.