districts

img

கல்வராயன்மலை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: விவசாய தொழிலாளர் சங்கம்

கள்ளக்குறிச்சி, டிச.29- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட 18வது மாநாடு பகண்டை கூட்டுச்சாலை வாராபுரத்தில் டிசம்பர் 28, 29  ஆகிய தேதிகளில் தோழர் ஜி.வீரையன் நினைவர ங்கத்தில் நடைபெற்றது.   இந்த மாநாட்டையொட்டி ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற செங்கொடி ஊர்வலம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அ.பா.பெரியசாமி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.லாசர் உரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. சுப்பிரமணியன், பி.பழனி, மு.ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பேசினர். பிரநிதிகள் மாநாட்டிற்கு அ.பா.பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர். கே.மூக்கன் செங்கொடியை ஏற்றி வைத்தார். . மு. ஆனந்தராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலத் தலைவர் ஏ. லாசர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் பி.சுப்பிரமணியன், பொருளாளர் பி.பழனி அறிக்கையை சமர்ப்பித்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், 60 வயது முடிந்த ஆண்,பெண் இருபாலருக்கும் ஓய்வூதியம் 3000 வழங்க வேண்டும், கல்வராயன் மலை மக்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும், பஞ்சமர், தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக சுப்பிரமணியன், செயலாளராக சு.பூமாலை, பொருளாளராக பழனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;