districts

img

டாக்டர் ஆர்.கே.எஸ். கலை கல்லூரி ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி, மார்ச் 27- கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர்.ஆர்.கே.எஸ்.கலை  மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஆண்டு விழா தலைவர் மருத்துவர் மகுடமுடி தலைமையில் நடைபெற்றது. இந்திலி ஊராட்சி மன்றத் தலைவி கலா சாமிதுரை, கல்லூரி தாளாளர் மருத்துவர் குமார், துணைத்தலைவர்கள் மணிவண்ணன், திருஞான சம்பந்தம், இயக்குநர்கள் கலியபெருமாள், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் ஆண்டுட றிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் கார்த்தி  கைச் செல்வன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி னார். தொடர்ந்து பெருமை மிகு பெற்றோர் விருது, டாக்டர்.ஆர்.கே.எஸ். சாதனை மாணவர் விருது  மற்றும் பல்வேறு துறை யில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசும் கேடய மும் வழங்கப்பட்டன. துணை முதல்வர் முனை வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.