districts

கல் குவாரியை எதிர்த்தவர் படுகொலை போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் கைது காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

கரூர், செப்.14 - அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ள கரூர் மாவட்ட சமூக ஆர்வலர்களை காவல்துறையினர் விடுவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே சட்டவிரோத கல் குவாரிகளை எதிர்த்து  செயல்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனை  லாரி ஏற்றி கொலை செய்தவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்டவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இறந்த வர் உடலை வாங்க மறுத்தும், இறந்த வரின் உறவினர்களுக்கு ஆதரவாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு  வந்த சாமானிய மக்கள் நல கட்சி யின் கரூர் மாவட்டச் செயலாளர் சண்முகம் புதன்கிழமை அதிகாலை காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் முகி லனை குண்டுகட்டாக தூக்கிச் சென்று  காவல்துறை அராஜகமாக கைது செய் துள்ளது.

இதேபோல இந்த போராட் டத்தில் ஈடுபடும் மனித உரிமை போராளி களையும், சமூக ஆர்வலர்களையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம்  காட்டுகின்றனர். கரூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் அமைதியாக போராட் டம் நடத்துபவர்கள் மீது அடக்குமுறை களை செலுத்தி, அராஜகமான முறை யில் கைது செய்துள்ளதை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்  குழுவின் வன்மையாக கண்டிக்கிறது.  காவல்துறையால் கைது செய்யப் பட்ட சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், மனித உரிமை போராளி முகிலன் உள்ளிட்ட அனைவரையும் கரூர் மாவட்ட காவல்துறை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சனையில் உடனடியாக தலை யிட்டு, கைது செய்யப்பட்ட சமூக ஆர்வ லர்களை விடுதலை செய்யக் கோரி யும், கொலையாளிகளுக்கு தக்க தண்ட னையும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு  உரிய நிவாரணமும், வேலைவாய்ப் பும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள் ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்ட குழு சார்பில் கேட்டுக்  கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;