கரூர், பிப்.7 - அரசுப் பள்ளிகளில் படித்து நடை பெற்று முடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதலாம் ஆண்டிற்கான புத்தகங் களையும், மருத்துவ உபகர ணங்களையும் கரூர் மாவட்ட ஆட்சி யர் மரு.த.பிரபுசங்கர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்வில் வழங்கிப் பாராட்டி னார். நடைபெற்று முடிந்த நீட் தேர்வில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ - மாணவிகள் பலரும் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் செங்குளம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ம.சின்ன துரை, தோகைமலை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் வெ.சிவனே சன், கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி இரா.ஆர்த்தி, சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ப.சா.அகல்திகா, குளித்தலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கு.நர்மதா ஆகிய 5 மாண வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு கோயம்புத்தூர் (2), திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி களில் இடம் கிடைத்துள்ளது. அதே போல, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜா.முர்சிதபானு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ந.நந்தினி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ம.புவ னேஸ்வரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கொ.சந்தியா, சேலத்தைச் சேர்ந்த கோ.தமிழ்ச்செல்வி, ச. கோவிந்தராஜ், திருவள்ளுர் மு. சகானா பர்வீன், கோயம்புத்தூர் அ. ஆப்ரின்ஜகான், ஈரோடு க.தீட்சித், நாகப்பட்டினம் பு.பாலகுமாரன் ஆகிய 10 மாணவ-மாணவிகளுக்கும் கரூர் அரசு மருத்துவக் கல்லாரியில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளி யில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவ-மாணவிகளுக்கு மட்டுமல்லாது, அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் இடம் கிடைத்துள்ள பிற மாவட் டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவி கள் 10 பேருக்கும் என மொத்தம் 15 மாணவர்களுக்கும் முதலாம் ஆண் டிற்கான புத்தகங்கள், மருத்துவ உப கரணங்களை கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் வழங்கி வாழ்த்தினார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15,000 வீதம், ரூ.2.25 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் ஸ்டெத்தஸ் கோப் உள்ளிட்ட மருத்துவ உபகர ணங்கள் வழங்கப்பட்டன.