districts

img

கல் குவாரி எதிர்ப்பாளர் லாரி ஏற்றி படுகொலை சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் குற்றச்சாட்டு

கரூர், செப். 11 - கரூர் மாவட்டத்தில் கல்குவாரி எதிர்ப்பு செயற்பாட்டாளர் ஜெக நாதன் என்பவரை லாரி ஏற்றி திட்ட மிட்டு சதித்தனமாக படுகொலை செய்யப்பட்டதாக  சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:  கரூர் மாவட்டம்,  புகலூர் வட்டம்,  குப்பம் கிராமத்தில் கடந்த 4 ஆண்டு களாக அனுமதி இல்லாமல், சட்ட விரோதமாக இயங்கி வந்த அன்னை கல் குவாரி (செல்வகுமார் கல் குவாரி) மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கல் குவாரி எதிர்ப்பு செயற்பாட்டாளர் ஜெகநாதன் தொட ர்ந்து புகார் கூறி மாவட்ட நிர்வா கத்திற்கு கோரிக்கை மனு கொடுத்து வந்தார். இதன் தொடர்ச்சியாக, சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் துணையுடன், கரூர் மாவட்ட கனிமவளத் துறை இணை இயக்குனர் ஜெயபால் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.9ஆம் தேதி) மூடப்பட்டது. இந்நிலையில் அன்னை கல் குவாரி மூடப்படுவதற்கு காரணமாக இருந்த ஜெகநாதன் சனிக்கிழமை மாலை அன்னை ப்ளூ மெட்டல் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். இது  திட்டமிட்டு சதித்தனமாக நிறை வேற்றப்பட்ட படுகொலை ஆகும் என்று சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.  ஜெகநாதன் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு கல்குவாரி உரிமை யாளர்களால் கொலைவெறித் தாக்கு தலுக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று உயிரோடு மீண்டு வந்தவர். குப்பம் கிராமம் காளிபாளையத்தை சேர்ந்த வர். இந்த சம்பவத்தில் உரிய விசார ணை நடத்தி இந்த கொலையை அரங்கேற்றிய அன்னை கல் குவாரி உரிமையாளர் செல்வகுமாரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.  தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா.முகிலன், சட்டவிரோத கல்  குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணை ப்பாளர் சு.விஜயன் உள்ளிட்டோரும் இப்பிரச்சனையில் அரசு, குற்ற வாளியை கைது செய்து சட்டப்படி தண்டனை வழங்க  வேண்டும். கல் குவாரி எதிர்ப்பு சமூக செயற்பாட்டா ளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

;