districts

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 25 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் அறிவிப்பு

கரூர், மார்ச் 14 - தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்ப னர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க கரூரில் நடை பெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் ம.செல்வக்குமார் தலைமை வகித்தார். கரூர்  மாவட்ட செயலாளர் மோகன் குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர்-அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட தலைவர் மு.சுப்பிரமணியன் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் வீ.பார்த்தசாரதி வேலையறிக்கையை முன் வைத்து பேசினார். முன்னாள்  மாநிலத் தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வ ராணி ஆகியோர் பேசினர். மாநில பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.  தமிழக அரசின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட-வட்ட மருத்துவ மனைகளில் உள்ள ஆய்வக  நுட்பனர் நிலை 2 இல் உள்ள காலிப் பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பணி நியமனம் செய்திட வேண்டும். விருதுநகர், புதி தாக கடந்த ஆண்டு அறி விக்கப்பட்ட, இராமநாத புரம், அரியலூர் உள்ளிட்ட  அனைத்து நிலை 2  ஆய்வு நுட்பனர் பணியிடங்க ளையும், அரசு முறையி லிருந்து காலமுறை ஊதிய பணியாளர் பணியிடங்கள் என  அறிவித்து தேர்வாணயம் மூலம் பணி நியமனம் செய்திட வேண்டும். 24 மணி நேர ஆய்வ கங்கள் நடைமுறையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் 30  உள் நோயாளிகளுக்கு ஒரு  பணியிடம் என ஆய்வாளர் நிலை 2இல், நிலை 1இல்  பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும். ஆய்வக நுட்புனர் நிலை 1இல் பதவிகளை புதிய  மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளில் பரவலாக உரு வாக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி மார்ச் 25 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் மாவட்ட  தலைநகரங்களில் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், ஏப்ரல்  22 ஆம் தேதி சென்னை யில் பெருந்திரள் முறையீடு  செய்து தமிழக முதல்வரி டம் மனு வழங்கும் போராட்ட மும், மே 27 ஆம் தேதி ஒட்டு  மொத்த தற்செயல் விடுப்பு  எடுக்கும் போராட்டம் நடத்து வது எனவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

;