districts

img

விஷவாயு தாக்கி நான்கு பேர் பலி; இருவர் கைது

கரூர், நவ.17-      கரூரில், விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை வாங்க மறுத்து  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்  வேறு அமைப்புகள் மற்றும்  உறவினர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து கட்டட உரிமையாளர் உள் ளிட்ட இருவரைக் கைது செய்த  காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து  விசாரிக்கின்றனர். கரூர் சுக்காலியூர் அடுத்த செல்லாண்டிபாளையத்தில் செவ்வாய்க்கிழமை கட்டப் பட்டு வரும் புதிய வீட்டின் கழிவுநீர் தொட்டியில் வைக்  கப்பட்டிருந்த முட்டுக்கட்டை களை பெயர்த்து எடுத்த போது விஷவாயு தாக்கி கரூர் மணவாசியை அடுத்த மலைப்  பட்டியைச் சேர்ந்த சிவக்  குமார் (38), தோரணக்கல் பட்டியைச் சேர்ந்த சிவா என்  கிற ராஜேஷ் ( 40), தாந்தோன்றி மலையை சேர்ந்த கன்னி யப்பன் மகன் மோகன்ராஜ் (23) ஆகியோர் செவ்வாய்க் கிழமை உயிரிழந்தார். மூன்று பேரின் உடல்கள் உடற்கூராயிவிற்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக் கப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக அரசு ரூ.10  லட்சம் வழங்க வேண்டும். மேலும், உயிரிழந்தவர் களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்  டும் எனக் கோரி உறவினர் கள் போராட்டம் நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
விஷவாயு தாக்கி உயிரி ழந்த தொழிலாளர்கள் மர ணத்திற்குக் காரணமான வர்கள் மீது எஸ்சி/எஸ்டி பிரி வில் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர்  மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, நகர் செயலாளர் எம்.தண்டபாணி தலைமை யில் தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத் தில் ஈடுபட்டன. அவர்களு டன் கரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி.தேவ ராஜன் தலைமையில் எஸ்.சி,இ எஸ்.டி., பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்வதாக உறுதியளித்தார்.
இருவர் மீது வழக்குப் பதிவு
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அஜாக்  கிரதையாக இருந்து தொழி லாளர்களை வேலை வாங்கி யதாக வெங்கமேடு ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கட்டட மேற்பார்வையாளர் கார்த்திக்(35), வீட்டின் உரி மையாளர் வழக்கறிஞர் குண சேகரன்(41) ஆகிய இருவர் மீதும் தாந்தோணிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு அவர்களைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மற்றொருவர் உடல் மீட்பு
விஷவாயு தாக்கி மூன்று பேர் பலியான நிலையில் காணாமல் போனதாக கூறப்  பட்ட கோபால் என்பவரது உடலை கழிவுநீர் தொட்டி யிலிருந்து சடலமாக தீய ணைப்பு மற்றும் மீட்புத்துறை யினர் மீட்டனர். கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன் உயிரிழந்த சிவக்  குமாருடன் சிவகுமாருடன் சென்ற எனது கணவரைக் காணவில்லை என கோபால் மனைவி விஜயலட்சுமி புகார் அளித்ததையடுத்து, பலியானவர்களில் கோபாலும் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் வியா ழனன்று கோபால் உடல்  மீட்கப்பட்டது. இதையடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்த வர்கள் எண்ணிக்கை நான் காக அதிகரித்துள்ளது.

;