districts

கரூர் மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து 2-வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

கரூர், மே 31 - பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும்  கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  மதன்குமாரை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்  பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட குழு சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட் டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். சுனில்குமார் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட பொருளாளர் ஆ.தமிழரசி வரவேற் றார். எஸ்டிஎப்ஐ பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜான்கிறிஸ்துராஜ் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். முன்னாள் மாநிலத் தலைவர் ச.மோசஸ், ஈரோடு மாவட்ட செயலாளர் இரா.மணி, நீலகிரி மாவட்ட செயலாளர் பெ.ஜெயசீலன், நாமக்கல் மாவட்ட செயலாளர் இரா.மாதேஸ், திருப்பூர் மாவட்ட செயலாளர் அ.பிரபுஜெபாஸ்டியன், கோயம்புத்தூர் மாவட்ட துணை செயலாளர் ப.வீராசாமி  ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில  துணைத் தலைவர் எம்.ஞானதம்பி உண்ணா விரத போராட்டத்தை நிறைவு செய்து சிறப்பு ரையாற்றினார். இதில் மேற்கு மண்டலம் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும்  நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;