districts

img

திருமண விழா

சிஐடியு கரூர் மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் இல்ல திருமண விழா கரூர் வெங்கமேட்டில் உள்ள பாக்கியராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மணமக்களை வாழ்த்தி பேசினார். சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, சிஐடியு மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கா.கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் எம்.தண்டபாணி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.