districts

போதைக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு சிபிஎம் கடும் கண்டனம்

கரூர், ஜன.4- கரூர் மாவட்டத்தில் போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிக்கு  மாயனூர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேஸ் மற்றும் துணை ஆய்வாளர் காளிமுத்து ஆகியோர் அனுமதி மறுத்த துடன், போட்டியை நடத்திய வாலிபர் சங்க  நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் அரசு சாராயக் கடை களிலும், மதுபான பார்களிலும் 24 மணிநேர மும் மதுபானம் கிடைக்கிறது. மேலும் கஞ்சா  புழக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால்  மாணவர்கள், இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டு இருக்கி றார்கள்.  இளைஞர்களுக்கும், மாணவர்களுக் கும், பொதுமக்களுக்கும் போதைக்கு எதி ரான விழிப்புணர்வு ஏற்படுத்திட இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிருஷ்ண ராயபுரம் ஒன்றியக் குழு சார்பில் புத் தாண்டு தினத்தன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டிக்கு அனுமதி வழங்க வேண்டும் என மாயனூர் காவல் நிலை யத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜி.பார்த்திபன், சிபிஎம் கிருஷ்ண ராயபுரம் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனுமதி கடிதம் கொடுக்க காவல்நிலையத்திற்கு சென்றனர்.

அப்போது, அவர்களை மாயனூர் காவல்துறை ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் ஆகியோர் ஒருமையில் பேசி, மரியாதை குறைவாக நடத்தியுள்ளனர். மேலும் கடி தத்தை வாங்க மறுத்து அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். போதைக்கு எதிரான மாரத்தான் போட்டியை நடத்தக்கூடாது என்று மாயனூர் காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மாயனூர் காவல்துறையினர் கிருஷ்ண ராயபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாரத்தான் போட்டியை தொடங்கக் கூடாது என்று வாலிபர் சங்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியுள்ளனர். போதைக்கு ஆதரவான சட்டவிராத கும்பலுக்கும், சாராயம், கஞ்சா வியாபாரிகளுக்கும் மாயனூர் காவல்துறை உடந்தையாக இருக்கிறதா என சந்தேகம் எழுகிறது.  விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்திய வாலிபர் சங்க மாநிலச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்டச் செய லாளர் பார்த்திபன், சிபிஎம் கிருஷ்ணாபுரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம் உள்  ளிட்ட 7 பேர் மீது மாயனூர் காவல்துறை  பொய்யான வழக்கை பதிவு செய்துள் ளது.  இதை கண்டித்தும், பொய் வழக்கை  ரத்து செய்ய வலியுறுத்தியும் கிருஷ்ணராய புரம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் ஜனவரி 8 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

;