districts

img

அனுமதியின்றி கனிம வளம் ஏற்றிச்சென்ற 18 கனரக வாகனங்கள் பறிமுதல்

நாகர்கோவில். ஏப்.18- கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அனு மதி இன்றி கனிமவளம் ஏற்றிச் சென்ற 18 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. கன்னியாகுமரி, தூத்துக் குடி, நெல்லை ஆகிய மாவட்டங்க ளில் இருந்து கேரளாவிற்கு அரசு அனுமதி பெற்று கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படு கிறது. கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு அரசு முறையான விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் அரசின் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி கேரளா விற்கு கனிம வளங்கள் கொண்டு செல்கின்றனர். இதனால் பல விபத்துக்களும் நடந்து வரு கின்றன. இதுகுறித்து தொடர்ந்து பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகர பிரசாத் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தொடர்ந்து வாகன சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிறன்று (ஏப்.17) இரவு களியக்காவிளை வரை போலீ சார் நடத்திய சோதனையில் அனுமதி இன்றியும் அதிக பாரம் ஏற்றிச் சென்றதுமான 18க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து சோதனை சாவடிகளிலும் போலீ சார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

;