districts

img

‘சினிமாவில் பெண்களை இழிவுப்படுத்துவதை எதிர்க்காத பெண்கள் குற்றவாளிகளே’ கடலூரில் வழக்காடு மன்றம்

கடலூர், செப். 27- மாதர் சங்க மாநில மாநாட்டையொட்டி பெண்கள் கல்லூரியில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு செப்டம்பர்  29, 30 அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்கள் கடலூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை ஒட்டி பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடலூர் சின்ன கங்கனாங் குப்பம் இமாக்குலேட் பெண்கள் கல்லூரியில் ‘சினிமாவில் பெண்களை இழிவு ப்படுத்தப்படுவதை எதிர்க்காத பெண்கள் குற்றவாளிகளே’ என்ற தலைப்பில் வழக் காடு மன்றம்  நடைப்பெறது. “பெண்கள் குற்றவாளிகளே” என தமுஎகச மாவட்டச் செயலாளர் பால்கி பேசினார். “பெண்கள் குற்றவாளிகள் இல்லை” என  முதுநிலை பட்டதாரிகள் ஆசிரி யர் சங்கத்தின் தெரசா கேத்தரின் பேசினர். இந்த வழக்காடு மன்றத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பேராசிரியர் ஜானகி ராஜா நடுவராக செயல்பட்டார். இதில் கல்லூரியின் செயலாளர் சகாயம், மனிதவள மேலாளர் மரியசாமி, கல்லூரி முதல்வர் உள்ளிட்ட 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

;