districts

img

காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கடலூர், மார்ச் 16- கடலூர் மாவட்டம், கங்கை கொண்டான் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ளது கங்கைகொண்டான் பேரூராட்சி. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 9 மற்றும் 10ஆவது வார்டு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக பேரூராட்சியின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீர் வரியை வசூல் செய்வதில் மட்டும் குறியாக இருக்கும் நிர்வாகம், குடிநீர் முறையாக வழங்குவதில் அக்கறை காட்டுவதில்லை எனக்கூறி வியாழனன்று (மார்ச் 16) அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் பேரூ ராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மந்தாரக்குப்பம் காவல்துறை யினர் குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என மறியலில் ஈடுபட்டுவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.

;