districts

img

வெளிநாட்டில் கொடுமைக்குள்ளாகும் கணவரை மீட்க கோரிக்கை

கடலூர், செப்.20- கடலூர் மாவட்டத்தி லிருந்து வெளிநாட்டிற்குச் சென்று கொடுமைக்கு உள்ளாகியிருக்கும் 3 பேரை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வர வேண்டுமென உறவி னர்கள் மாவட்ட ஆட்சிய ரிடம் புகார் மனு அளித்த னர். கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கட லூர் மாவட்டம் பெரிய காரைக்காட்டைச் சேர்ந்த மஞ்சுளா, பகண்டையைச் சேர்ந்த குணா, பில்லாலித் தொட்டியைச் சேர்ந்த பைரவி ஆகியோர் தங்களது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், மஞ்சுளாவின் கணவர் செல்வரங்கன் (39), குணா மனைவி சர வணன் (30), பைரவியின் சகோதரர் பிரசாந்த் (27) ஆகியோர்  திருச்சியில் உள்ள தனியார் முகவர்கள் மூலமாக கடந்த மே 28 ஆம் தேதி ஓமன் நாட்டிற்கு வெல்டர் வேலைக்காக சென்றனர்.  அந்த முகவர்களுக்கு ரூ.55 ஆயிரத்தை எங்க ளது நகைகளை அடமான மாக வைத்து வழங்கி வெளி நாட்டிற்கு அனுப்பி வைத்தோம். கடந்த 4 மாத மாக வேலை பார்த்த நிலை யில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லையாம். இதனால், அங்குள்ள மசூதி யில் தங்கியிருந்து உண வருந்தி வருகின்றனர்.  ஊருக்கு அனுப்பி வைக்க கேட்ட போதும் அந்த நிறுவனங்கள் மறுப்ப தோடு, ரூ.2 லட்சம் பணம் கட்டி விட்டுச் செல்ல வேண்டும், இல்லை யென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனராம். இதனை, அங்கிருந்து எங்களுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். எனவே, வெளிநாட்டில் சம்பளமும் கிடைக்காமல், உயிருக்கும் பயந்து பல்வேறு கொடு மைகளுக்கு உள்ளாகி வரும் 3 பேரையும் மீட்டு மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

;