districts

அதிகாரிகள் உறுதி: போராட்டம் ஒத்திவைப்பு

கடலூர், அக். 20- மாற்று இடம் வழங்க அதிகாரிகள் உறுதி அளித்ததால் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் குடியேறும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. கடலூர் வட்டம் திருவந்திபுரம் குறு வட்டம் பாதிரிக்குப்பம், நத்த வெளி சாலை புறம்போக்கில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த 75 குடும்பகங்ளின் குடிசைகள் 2018ஆம் ஆண்டு நெடுஞ் சாலைத் துறை மற்றும் வருவாய் துறையினரால் சாலை விரி வாக்கத்திற்காக அகற்றப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்கு வதாக உறுதியளித்து நான்கு ஆண்டு கள் கடந்தும் அளித்த வாக்குறுதியின் படி மாற்று இடம் வழங்கவில்லை. உடனடியாக அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி தொகுப்பு வீடு கட்டித்தர வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கடலூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் வியாழனன்று (அக். 20) நடைபெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. இதையடுத்து வட்டாட்சியர் பூபாலச்சந்திரன், காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, வருவாய்துறை அதி காரிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, செயலாளர் எஸ்.பிரகாஷ், பொருளாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் வைத்திலிங்கம், கோதண்டபாணி, கோவிந்தம்மாள், தமிழரசன், நட ராஜன், வேலவன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களுக்குள் மாற்று இடம் வழங்குவதாக அதிகாரி கள் உறுதி அளித்தனர். மேலும் வெள்ளிக்கிழமை அன்று அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இடத்தை தேர்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து குடியேறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் படுவதாக சங்க நிர்வாகிகள் தெரி வித்தனர்.

;