districts

img

நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூன் 9- நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 31 விழுக்காடு அக விலைப்படியை உடனே வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை தேர்தல் அறிக்கையின் படி தனித்துறையாக அறிவிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு காசாக்கும் சலுகையை வழங்க வேண்டும். பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும் நிலையில் விற்பனை முனைய இயந்திரத்தில் இணையதள பிரச்சினைக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.  வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய புதிய ஊதிய உயர்வு ஆணையை மேலும் தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட துணைத் தலைவர் டி.கந்த வேல் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் மாநில பொதுச்செயலர் ஆர்.ஜீவானந்தம், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.அரிகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். சங்க நிர்வாகிகள் பி.பெரியசாமி, டி.பன்னீர்செல்வம், எம்.வேல்முருகன், கே.சுதாகர், கே.சிவனேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;