districts

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

கடலூர்,டிச.3- அனுமதிக்கப்பட்டு ஏழு மாத மாக நிலுவையிலுள்ள வருங்கால வைப்பு நிதி கடன் தொகையை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும்,  ஒப்பந்தப்படி வேலை செய்த பணியாளர்களு ரூ. 50 லட்சத்தை உடனடியாக கொடுக்க வேண்டும், களப்பிரிவு ஊழி யர்களுக்கு மழை கோர்ட், பாது காப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், மின் இணைப்பு வழங்காமல் மின்வாரியத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் கடலூர் புதுநகர் உதவியை மின் பொறியாளரை இடமாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட சிறப்புத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி னார். மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிவேல், மண்டலச் செயலாளர் அம்பிகாபதி, மாவட்டச் செயலாளர் தேசிங்கு, மாவட்டப் பொருளாளர் ஜீவா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

;