கடலூர், ஆக.8- என்எல்சி நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாட்டால் தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது.
இது குறித்து மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சுரங்கம் 1 கன்வெயரில் மண் கொட்டு வதற்கு சைகை (சிக்னல்) கொடுத்துக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளி குழந்தைவேலு மீது புல்டோசர் ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். இதுபோன்ற, கடந்த மாதம் சுரங்கம்-2 இல் பணியாற்றிய தொழிலாளி கே. அன்பழகன் உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் தொழிலாளர் மத்தியில் மிகுந்த அச்சஉணர்வை ஏற்படுத்தியது.
கடந்த மூன்று ஆண்டுகளில் என்எல்சி நிறுவன சுரங்கங்கள் பாதுகாப்புக்கான பல்வேறு நற்சான்றிதழ்களையும் வெகுமதிகளும் பெற்றுள்ளது. ஆனால், சமீபகாலங்களில் நடந்து வரும் தொடர் மரணம், தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் தொழிலாளர்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
எனவே, என்எல்சி நிர்வாகம் சம்பந்தப் கட்ட சுரங்கங்களின் நிர்வாகங்களும் தொழிலாளர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உயிரிழந்த தொழி லாளர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.