districts

126 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினார்

அரியலூர், ஆக.25- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் இளையபெருமாள்நல்லூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். உடை யார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், 126 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 84 ஆயி ரத்து 847 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் அட்மா வேளாண் குழு தலைவர் மணி மாறன், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்க டேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை, இயற்கை மரணம்  உதவித்தொகை, பட்டா மாற்றம், தோட்டக்  கலைத் துறை வேளாண்மை துறை, வேளா ண்மை பொறியியல் துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 177 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 126  மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 24 மனுக்  கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 27 மனுக்கள்  விசாரணையில் உள்ளன.  சுய உதவி குழுக்களால் அமைக்கப்பட்டி ருந்த கண்காட்சியில் இயற்கை வளம் மிகுந்த  காய்கறி, பழங்கள், கீரை வகைகள், சத்தான  உணவு வகைகள் உள்ளிட்டவை வைக்கப் பட்டிருந்தன.

;