districts

img

உலக செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவி முதல்வரை சந்திக்க கோரிக்கை

அரியலூர், அக்.16 - அரியலூர் மாவட்டம் உடையார்பாளை யம் பகுதியைச் சேர்ந்த சரவணன்-அன்பு ரோஜா தம்பதி. இவர்களது மகள் சர்வாணிகா  (7), அப்பகுதியில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு  பயின்று வருகிறார். இவர் அண்மையில், குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் நடைபெற்ற 35-வது தேசிய  மாபெரும் சதுரங்க போட்டியில் பங்கேற்று, தமிழ்நாடு சார்பில் 7 வயதுக்குட்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டார். இதில் மொத்தம் 11 சுற்றுகளில் போட்டிகள் நடை பெற்றன. அதில் 11 சுற்றுகளிலும் வெற்றி  பெற்று, இந்திய அளவில் முதலிடம் என்ற  சாதனையை மாணவி சர்வாணிகா படைத்து உள்ளார். இதன் மூலம் ஆசிய, தெற்காசிய, காமன்வெல்த் மற்றும் உலகப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.  இதில் பங்கு பெற தனக்கு சலுகைகள் வழங்கி உள்ள நிலையில், தன்னுடன் செல்வ தற்கு தாய் அல்லது தந்தைக்கு உதவி வழங்க வேண்டும் என முதல்வரிடம் மனு  அளிக்க வேண்டும். இதற்கு முதல்வரை சந்திக்க வேண்டும் என மாணவி சர்வாணிகா  ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், தான் உலக செஸ் போட்டிக்கு தகுதி பெற்றதையும், தனது 11 வெற்றிகள் குறித்தும் தெரிவித்து, கண்ணன் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்றார்.

;