districts

சிறையிலிருந்து கைதி தப்பி ஓட்டம்

அரியலூர், செப்.19- அரியலூர் மாவட்டம் உடையார்பாளை யம் அருகே உள்ள செட்டிகுழிப்பள்ளம் கிரா மத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (70).  இவருக்கும் இவரது சகோதரர் கலியபெரு மாள் ஆகியோருக்கும் இடையே வயலில்  ஆடு மேய்ந்த தகராறில், கலியபெருமாளின் பேரன் மணிகண்டன் இடையில் சென்று  சின்னதுரையை தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் தாக்கப்பட்ட சின்னதுரை, கலிய பெருமாள் மற்றும் மணிகண்டன் மீது உடை யார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கடந்த  செப்.16 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஞாயிறன்று உணவு சாப்பிடுவதற்காக காம்பவுண்டுக் உள்ளேயே  திறந்த வெளிக்கு வந்த சிறைக் கைதிகளில், மணிகண்டன் மட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி சிறைச்சாலையின் காம்பவுண்ட் சுவரை  ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டார்.  பின்னர் காவ லர்கள் வெளியில் வந்த சிறை கைதிகளை,  எண்ணி மீண்டும் சிறையில் அடைக்கும்  போது மணிகண்டன் தப்பி ஓடியது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் சிறை கண்காணிப்பாளர் பொன்பகத்சிங் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தப்பி ஓடிய மணிகண் டனை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி  வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் தண்டலை பகுதியில் உறவினர் வீட்டில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் விரைந்து  சென்று தப்பி ஓடிய கைதியை ஒரு மணி நேரத்திற்குள் பிடித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

;