districts

img

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குக! மாதர் சங்க மாநாடு கோரிக்கை

அரியலூர், ஜூன் 17- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தா.பழூர் ஒன்றிய மூன்றாவது மாநாடு சங்க அலுவலகத்தில் நடை பெற்றது.  மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் வாசுகி தலைமை வகித்தார். மாநாட்டில் மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநில துணைத் தலைவர் கீதா, மாவட்டச் செயலாளர் பத்மாவதி, மாவட்ட துணைச் செயலாளர் மீனா, மாவட்டப் பொருளாளர் அம்பிகா, ஒன்றியச் செயலாளர் உமாதேவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  மாநாட்டில் ஒன்றிய தலைவராக செபஸ்தியம்மாள், துணைத் தலை வராக கிருஷ்ணவேணி, செயலாள ராக உமாதேவி, துணை செயலா ளர்களாக அழகு ரோஜா, லட்சுமி, பொருளாளராக செல்வி உள்ளிட்ட 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் வீடுகள் இல்லா ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். தா. பழூர் கடைவீதியில் பெண்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும், விரிவடைந்த பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.