districts

img

நேபாளத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜெயங்கொண்டம் வீராங்கனைக்கு டிஎஸ்பி பாராட்டு

அரியலூர், ஆக.13 - கடந்த ஆகஸ்ட் 6 அன்று நடை பெற்ற நேபாளத்தில் YSPA INDO -  NEPAL INTERNATIONALS விளை யாட்டு போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் பழனிராசு மற்றும் இளஞ்சி யம் தம்பதியரின் மகளான நிவேதிதா, அமுல் ஸ்போர்ட்ஸ கிளப் சார்பில் பங் கேற்று 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்  12.58 வினாடிகளில் ஓடி இந்தியாவிற் காக தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 40 பேர் பங்கேற்றனர்.  தங்கம் வென்ற நிவேதிதாவை காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் நேரில் அழைத்து பாராட்டி னார். மேலும் இவரை ஜெயங்கொண் டம் எம்எல்ஏ கண்ணன் பாராட்டி ஊக்கு வித்தார்.  இதுகுறித்து பேசிய நிவேதிதா, இந்த போட்டியில் பங்கேற்க சென்ற போது தான் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.  100 மீட்டர் ஓட்டத்தை கடக்க முதலில்  16 விநாடிகள் ஆனது. பின்னர் பயிற்சி யின் மூலம் 13 வினாடிகளில் கடந் தேன். தற்போது 12.58 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றுள் ளேன். இந்திய அணிக்காக ஒலிம்பிக் கில் தங்கம் வெல்வதே தனது லட்சி யம் என்றார். பின்னர் பேசிய பயிற்சியாளர் மணி மாறன், ‘ஜெயங்கொண்டம் பகுதியில் விளையாட்டு மைதானங்கள் பெரும்பா லும் கரிசல் மண்ணாகவே உள்ளன. சிந்தடிக் மைதானங்கள் அமைத்து கொடுத்தால், சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வெல்வது  எளிதாக இருக்கும்’ என்றார்.

;