districts

அரியலூர்,மயிலாடுதுறை ,கும்பகோணம் முக்கிய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

அரியலூர், ஜன.8 -  தா.பழூர் ஒன்றியம் முழுவதும் கொரோனா வைரஸ், ஒமைக்ரான் குறித்து ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்பு  ணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு   வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் தலைமை வகித்தார்.   அப்போது அவர் ஆட்டோவை சிறிது தூரம் ஓட்டிச்சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சி  யில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குணசேக  ரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சத்தியராஜ், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேருந்துகளுக்கு அபராதம்
கும்பகோணம், ஜன.8 - கும்பகோணம் - தஞ்சை மெயின் ரோடு ராமன் சந்திப்பு  சாலையில் ஏராளமான தனியார் பேருந்துகள் போலீசார் விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் மாற்று வழியில்  (ஒன்வே) செல்வதாக அப்பகுதியை சேர்ந்த பலர் போலீசா ருக்கு தகவல் தந்தனர். அதன் அடிப்படையில் கும்பகோணம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் போலீசார்  அவ்வழியில் சென்ற தனியார் பேருந்துகளை கண்காணித்த னர். விதிமுறைகளை மீறி பேருந்து நிலையம் சென்ற 16-க்கும்  மேற்பட்ட பேருந்துகளை தடுத்து நிறுத்தி, அந்தப் பேருந்து களில் பணியாற்றும் ஓட்டுர், நடத்துநர்களிடம் உள்ள ஆவணங் களை சோதனையிட்டனர்.  இதில் அந்தப் பேருந்துகள் தான் செல்ல வேண்டிய வழி களுக்கு பதிலாக மாற்று வழியில் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த தனியார் பேருந்துகளுக்கு தலா ரூ.600  வீதம் 16 பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.

முகக்கவசம் அணியவில்லை: அபராதம் விதிப்பு
கும்பகோணம், ஜன.8 - கும்பகோணம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றவர்களிடம் தலா ரூ.200 வீதம் நகராட்சி சுகாதார  அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர். கும்பகோணம் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க மாந கராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் பாதுகாப்பு வழிமுறை களை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து  மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா தலைமையில், சுகா தார ஆய்வாளர்கள் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழி யாக முகக்கவசம் அணியாமல் வந்த சுமார் 50 பேரிடம் தலா  ரூ.200 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

பழைய அரசுப் பள்ளி கட்டிடத்தில் கதவு, ஜன்னல்கள் அகற்றம்
சீர்காழி, ஜன.8 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் அரசு உயர் நிலைப் பள்ளிக்கு சொந்தமான பழமையான இரண்டு கட்டிடங்கள் உள்ளன. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு  இந்தக் கட்டிடங்களில் தான் அனைத்து வகுப்புகளும் நடந்து  வந்தன. இந்த கட்டிடங்கள் மிகவும் பழமையாக உள்ளதால்  இங்கு வகுப்புகள் நடத்துவது நிறுத்தப்பட்டு புதிய கட்டி டத்திற்கு மாற்றப்பட்டு அங்கு வகுப்புகள் நடந்து வரு கின்றன.  இந்நிலையில் பழமையான 2 பள்ளி கட்டிடங்கள் வலி மையிழந்து, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதை,  இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையினை ஏற்று பழமையான கட்டிடங்களை இடிக்க  அதிகாரிகள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து வெள்ளி யன்று முதற்கட்ட பணியாக இரண்டு கட்டிடங்களில் உள்ள  இரும்பு கம்பிகள், ஜன்னல் கம்பிகள், விலை உயர்ந்த மரக்கத வுகள் மற்றும் மரச்சாமான்கள் உள்ளிட்ட அனைத்து வகை யான பொருட்களும் முதல் கட்டமாக அகற்றப்பட்டன.  தற்போது பள்ளியின் இந்த இரண்டு கட்டிடங்களும் ஓரிரு தினங்களில் முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்படும் என்று  கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி மயில் பலி
அரியலூர், ஜன.8 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி கிரா மத்தில் காளியம்மன் கோவில் அருகில் உள்ள வயல்வெளி  பகுதிகளில் தற்போது சம்பா நடவு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இரை தேடி  அதிக அளவில் மயில்கள் வந்து செல்கின்றன. வெள்ளியன்று  அங்கு உள்ள வயல் வெளிப்பகுதியில் இரை தேடி பறக்க முயற்சித்த பெண் மயில் ஒன்று, அங்குள்ள விவசாய மின்  கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் கம்பியில் அதன் இறக்கைகள் உரசியதால், மின்சாரம் தாக்கப்பட்டு அந்த மயில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தா.பழூர் போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் மருத்துவ முகாம்
தஞ்சாவூர், ஜன.8 - தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித் துறையின் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மாணவர் குழு, சைல்டு லைன் 1098 மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பாக கடுவெளியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.  இதில் சைல்டு லைன் மைய நிறுவன இயக்குநர் மற்றும்  சமூகப் பணித்துறை தலைவர் முனைவர் ஆனந்த் ஜெரால்டு  செபாஸ்டின் தலைமை வகித்தார். ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் செயலர் சங்கர் வரவேற்றார். இவ்விழாவில், பெரி யார் மணியம்மை மருத்துவமனை மருத்துவர் புஷ்பா உரை யாற்றினார்.  இம்முகாமில் 150 குழந்தைகள், 75 முதியவர்கள், 25  பெண்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. அதோடு  குழந்தைகளுக்கு பூச்சி மாத்திரைகள் மற்றும் முதியவர் களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

விவசாயிகளுக்கு பயிற்சி
அரியலூர், ஜன. 8- ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப  மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் மாவட்டத் திற்குள்ளான விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா தலைப்பின்  கீழ் அங்கக பண்ணையம் குறித்த பயிற்சிக்கு சோழமாதேவி யில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்  அசோக்குமார் விவசாயிகளிடத்தில் பயிற்சி அளித்து பேசினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் செய்திருந்தார்.

;