districts

விருதுநகர் மாவட்டத்தில் ஆர்வமுடன் வேட்புமனுக்களை வாங்கிச் சென்ற வேட்பாளர்கள்

விருதுநகர், ஜன.28- விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநக ராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறை யாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாந கராட்சியில் 48 வார்டுகள் இடம் பெற்றுள் ளன. அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகளும், இராஜபாளையம் நகராட்சி யில் 42 வார்டுகளும், சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகளும், திருவில்லிபுத்தூர் நகராட்சி யில் 33 வார்டுகளும், விருதுநகர் நகராட்சி யில் 36 வார்டுகள் என மொத்தமுள்ள 5 நக ராட்சிகளில் 171 வார்டுகள் உள்ளன. மேலும், செட்டியார்பட்டி, காரியா பட்டி, மல்லாங்கிணறு, எஸ்.கொடிக் குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி   பேரூ ராட்சிகளில் தலா 15 வார்டுகள் உள்ளன. மம்சாபுரம், சேத்தூர், வத்திராயிருப்பு பேரூ ராட்சிகளில் தலா 18 வார்டுகள் உள்ளன. மொத்தமுள்ள 9 பேரூராட்சிகளில் 144 வார்டு கள் உள்ளன.   இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர் தல் அலுவலர் ஜெ.மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.  விருது நகர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நாள் தொடங்கியதையொட்டி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மற்றும் ஏரா ளமான சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர்.