districts

img

இந்தியாவில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 100 கோடியாக அதிகரிக்கும்

வேலூர்,அக்.13- அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா வில் உழைக்கும் மக்களின் எண்ணிக் கை 100 கோடியாக அதிகரிக்கும் என்று இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறு வன இயக்குநர் துசார் காந்தி பெஹரா கூறினார்.

வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின்  19 ஆவது பட்ட மளிப்பு விழா அக்டோபர் 13 அன்று  நடை பெற்றது. பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் வரவேற்றார்.  ஆளு நர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டம்  வழங்கினார். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு வில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் துசார்  காந்தி பெஹரா பங்கேற்று பேசுகை யில், இந்தியாவில் உழைக்கும் மக்க ளின் எண்ணிக்கை 2021 இல் 90 கோடி யில் இருந்து அடுத்த பத்தாண்டுகளில் 100 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் வறுமைக் கோட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை பல்வேறு வகைகளில் குறைந்துள்ளது. இதன்மூலம், நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை 30 கோடியாக அதிகரித்துள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தால் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை வரும் 2031 இல் 38 சதவீதமாகவும், 2047 இல்  60 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் 3.50 லட்சம் வகை யான மாறுபட்ட ரசாயனங்கள் பல்வேறு வகை உற்பத்தி நிறுவனங் களில் பயன்படுத்துவதால் ஆறுகள், ஏரிகள், கடல்களின் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. உலக மக்கள் தொகை யில் 18 சதவீதம் அளவுக்கு கார்பன் மாசு ஏற்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இந்தியா 2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் வெளியீட்டை நோக்கி நகர்ந்து  வருகிறது என்று பேசினார். 

திருவள்ளுவர் பல்கலையில் மொத்தம் 28 ஆயிரத்து 417 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில், 155 மாணவர்கள் நேரடியாக பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா அரங்கில் பட்டம் பெற்றனர்.