வேலூர், ஆக. 2- வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா ஒலக்காசி பகுதியில் அரசு மணல் குவாரி துவங்ககோரி வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு தலைவர் எஸ். பங்கு மூர்த்தி, செயலாளர் விஜயன் ஆகியோர் தலைமையில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.குப்பு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.சரவணன், விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் பி.குணசேகரன், பீடி சங்க பொருளாளர் எஸ்.சிலம்பர சன், மாட்டுவண்டி சங்க பொரு ளாளர் எம்.அசோகன், எஸ்.சங்கர், இ.மூர்த்தி,கிருஷ்ணன். கோவிந்த ராஜ், சரவணன், ராஜா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளுடன் கலந்து கொண்டனர். இதனையடுத்து, வட்டாட்சியர் அலு வலகத்தில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியரும், குடியாத்தம் காவல் துணைக் கண்காணிப்பாளரும் பங்கேற்ற சமரச பேச்சுவார்த்தை துணை வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சித்தாத்தூர் பகுதியில் மணல் குவாரி விரைந்து திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.