districts

img

மணல் குவாரி அமைத்து தரக் கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டத்தில் மணல் மாட்டு வண்டிகளுக்கு என தனியாக குவாரி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் தஞ்சை பொதுப் பணித்துறை, நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தினர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு என  தனியாக குவாரி அமைக்கப்பட்டு மணல்  விற்பனை நடைபெற்று வந்தது. இந்நி லையில், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக, மணல் குவாரி கள் மூடப்பட்ட நிலையில் தொழிலாளர் கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட் டுள்ளனர்.  தற்போது ஊரடங்கு தளர்வு அறி விக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி யுள்ள நிலையில், மாட்டுவண்டி தொழி லாளர்களுக்கு மீண்டும் மணல் குவாரி  அமைத்து தர வேண்டும் என வலி யுறுத்தி, மணல் மாட்டு வண்டித் தொழி லாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப் பட்டன.  ஆனால் இதுவரை உரிய நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இதனால்  அதிருப்தியடைந்த மணல் மாட்டுவண்டி  தொழிலாளர்கள் 300-க்கும் அதிக மானோர், தஞ்சாவூர் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார துறை செயற்பொறி யாளர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  

இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், முறைசாரா தொழிலாளர்கள்  சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.அன்பு, எஸ்.செங்குட்டுவன், மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் திருப்பனந்தாள் கோவிந்தராஜ், கும்ப கோணம் லட்சுமணன், பாபநாசம் நாக ராஜ், ஆடுதுறை கைலாசம், திருவிசை நல்லூர் மோகன், தாராசுரம் தங்கையன்,  பட்டுக்கோட்டை மூர்த்தி, ஊரணிபுரம் திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.  இதில், “உடனடியாக மாட்டுவண்டி க்கு என தனியாக மணல் குவாரியை தொ டங்க வேண்டும். கனரக வாகனங்க ளில் மணல் அள்ளுவதை தடை செய்ய  வேண்டும். தனியார் மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும்” என வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  இதையடுத்து, சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.ஜெயபால் மற்றும் போராட்டம் நடத்தியவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, “ஏற்கனவே இயங்கி வந்து, தற்காலிகமாக கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி, பூதலூர் தாலுகா  திருச்சென்னம்பூண்டி, பட்டுக்கோட்டை தாலுகா சின்ன ஆவுடையார்கோயில் ஆகிய இடங்களில் மீண்டும் மணல் குவாரியைத் திறக்க வேண்டும்.

மேலும், புதிய மணல் குவாரிக்கு ஆய்வு செய்து திறக்க நடவடிக்கையில் உள்ள,  திருவிடைமருதூர் தாலுகா முள்ளங் குடி, பாபநாசம் தாலுகா நடுப்படுகை, கோவிந்தநாட்டுச்சேரி, வீரமாங்குடி, திருவையாறு தாலுகா மருவூர், சாத்த னூர், பூதலூர் தாலுகா சுக்காம்பார்,  ஒரத்தநாடு தாலுகா ஈச்சன்விடுதி, பேரா வூரணி தாலுகா பெத்தனாச்சிவயல், காயாவூர், பட்டுக்கோட்டை தாலுகா தொக்காலிக்காடு ஆகிய இடங்களில் மணல் குவாரி திறக்க வேண்டும்” என  வலியுறுத்தப்பட்டது.  இதையடுத்து, சென்னையில் அனைத்து மாவட்ட செயற்பொறியா ளர்களுடன் பேச்சுவார்த்தை மார்ச் 2 (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அதன் பிறகு குவாரிகள் திறக்கப்படும் முடிவு குறித்து உயர் அலுவலர்கள் அறி விப்பார்கள் என தஞ்சை பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை அதிகாரி கள் தெரிவித்தனர். இதையடுத்து பகல்  12 மணி முதல் மாலை 5 மணி வரை  சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற முற்று கைப் போராட்டம் கைவிடப்பட்டது.