districts

காளகஸ்திநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.43 வசூல் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை,  பிப்.28 - மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் அரு கேயுள்ள காளகஸ்திநாத புரம் நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் மூட்டை க்கு ரூ.43 தர வேண்டுமென கொள்முதல் நிலைய அதி காரி வற்புறுத்துவதாக பாதிக் கப்பட்ட விவசாயிகள் குற்றச் சாட்டு வைத்துள்ளனர். காளகஸ்திநாதபுரம் அரசு நேரடி நெல்கொள் முதல் நிலையத்தை சுற்றி யுள்ள மடப்புரம், முடிகண்ட நல்லூர், உமையாள்புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர்.  சம்பா நடவு செய்ய துவங்கியதிலிருந்து தொ டர்ந்து அவ்வப்போது பெய்த  கனமழை வெள்ளத்தால், அழிந்தது போக தப்பி பிழைத்த நெற்பயிர்களை அறுவடை செய்து நாள் கணக்கில் கொள்முதல் நிலையத்தில் காத்துக் கிடந்து  விற்பனை செய்தால் மூட்டை க்கு ரூ.43 கட்டாயமாக தர  வேண்டுமென பட்டியல் எழுத்தர் பிடிவாதமாக இருப்ப தாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுவதாக கூறப்படு கிறது.  ஏற்கனவே பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வட்டிக்கு கடனை வாங்கி சாகுபடி செய்யும் விவசாயி களை வஞ்சிக்கும் வகையில்  மூட்டைக்கு ரூ.43 என  வசூல் செய்யும் காளகஸ்தி நாதபுரம் அரசு நேரடி நெல்  கொள்முதல் நிலைய அதி காரி மீது தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக உயர்  அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுப்பார்களா?