தரங்கம்பாடி, ஜூலை 5 - நீண்ட தூரம் பயணம் செய்து கல்வி கற்க வரும் மாணவர்கள் வயிற்று பசியோடு வீடு திரும்பக் கூடாது என்ற எண்ணத்தோடு நாள்தோ றும் சுவையான, தரமான மதிய உணவை பொறையாரிலுள்ள த.பே.மா.லு கல்லூரி இடை விடாது வழங்கி வருகிறது. கல்வியை வியாபாரமாக பார்க்கும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் சாதாரண ஒடுக்கப்பட்ட, பட்டியலின சமூக மக்களும் உயர் கல்வியை பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச் சபையால் உருவாக்கப்பட்டு அரை நூற்றாண் டாய் தரமான கல்வியை வழங்கி வருகிறது தரங்கம்பாடியை ஒட்டியுள்ள பொறையாரில் இயங்கி வரும் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி. குறைந்த கட்டணத்தை பெற்றுக் கொண்டு கல்வி சேவையை தொடர்ந்து வழங்கி வரும் இக்கல்லூரி 1972 இல் தொடங்கப்பட்டது. கல்லூரி முதல்வராக ஜீன் ஜார்ஜ் என்பவர் பணி யாற்றி வருகிறார் (10 ஆவது முதல்வர்). கலை, இலக்கியம், பாரம்பரிய கலாச்சாரம், விளை யாட்டு என பன்முக தன்மையுடன் மாணவர் களை பயிற்றுவிப்பதோடு, இந்திய அளவில் பல முறை விளையாட்டுகளிலும், இலக்கிய பிரிவு களில் மாநில, மாவட்ட அளவில் சாதனை படைத் துள்ளது. பறையாட்டம், சிலம்பாட்டம் என அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு பயிற்றுவிக்கின்ற னர். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சேவை அமைப்புகளில் ஏராள மான மாணவர்கள் ஆர்வமுடன் தங்களை ஈடு படுத்தி கொண்டுள்ளனர். 2,400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றி யுள்ள பகுதிகளில் மட்டுமின்றி சிதம்பரம், காட்டு மன்னார்கோயில், காரைக்கால் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் வந்தும், தனித்தனியே உள்ள விடுதிகளிலும் தங்கி பயின்று வருகின்றனர்.
காலை-மாலை நேர பிரிவுகளுடன் இயங்கி வருகிற இக்கல்லூரி யில், மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் சிறந்த தேர்ச்சியும், தங்க பதக்கங்களையும் தொ டர்ந்து பெற்று வருகின்றனர். இயற்கை சூழலுடன் அமைக்கப்பட்ட கல்லூரி வளாகம், நவீன கட்டமைப்புகளுடன் கூடிய ஆய்வகங்கள், எஸ்.சி/எஸ்.டி மாண வர்களுக்கு அரசு உதவித்தொகை எளிதாய் பெற்றுத் தரப்படும் இக்கல்லூரியில் பாரம்பரிய கலைகள் பயிற்றுவிப்பதோடு, அழிந்து வரும் பாரம்பரிய உணவுகளையும் மக்களுக்கு நினை வூட்டும் விதமாக ஆண்டுதோறும் பிரம்மாண்ட உணவு திருவிழாக்களும் நடத்தப்படுகிறது. பல கி.மீட்டர் தொலைவிலிருந்து கல்லூ ரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் வீடு திரும்ப தாமதமாகும் என்பதை உணர்ந்த கல்லூரி பேரா சிரியர்கள், தங்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை நிர்வாகத்திடம் அளித்து, நாள்தோ றும் மதிய உணவை கல்லூரி உணவகத்தி லிருந்து இலவசமாக வழங்கி வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர் களுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இல வசமாக மதிய உணவை இக்கல்லூரி வழங்கி வரு கிறது. கொரோனா ஊரடங்கின் போது பாதிக்கப் பட்ட ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இக்கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் அவர்களின் வீடு களுக்கே நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கியது பலராலும் பாராட்டப்பட்டது. கல்லூரியில் சேர்ந்துவிட்டால் போதும் பல வழிகளில் மாணவர்களிடத்திலிருந்து பணம் பறிக்கும் கல்வி நிலையங்களுக்கு மத்தியில், சத்தமின்றி நல்சேவையாற்றும் தரங்கை பேரா யர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் கல்விப் பணி தொடரட்டும். - செ.ஜான்சன்