தஞ்சாவூர், ஜூலை 27 -
பேராவூரணி பகுதி மக்களின் முக்கிய நீராதாரமான பெரியகுளம் ஏரியின் ஆக்கி ரமிப்புகளைச் சட்டப்பேரவை மனுக்கள் குழு அறிவிப்பின்படி அகற்றி, தூர்வார நட வடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்க ளும் விவசாயிகளும் கோரிக்கை விடுத் துள்ளனர்.
பேராவூரணி நகர் மக்களின் முக்கிய நீராதாரமான பெரிய குளம் ஏரி, கடந்த பல ஆண்டுகளாகத் தூர் வாரப்படாமல் ஆக்கிர மிப்பில் உள்ளது. குளம் நிரம்பியுள்ள காலங் களில் பேராவூரணி மக்களும், கடைவீதி வியா பாரிகளும் குளத்தின் அனைத்துக் கரைப் பகுதிகளிலும் காலை முதல் இரவு வரை குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.
குறிப்பாகக் கால்நடைகளின் தண்ணீர் தேவைகளுக்கும், குளிப்பாட்டவும் பயன் பட்டது. மேலும் பேராவூரணி செங்கமங்க லம், அம்மையாண்டி, மாவடுகுறிச்சி, பழைய நகரம் பொன்காடு, மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்ததோடு, நிலத்தடி நீர் மட்டம் உயரவும் காரணமாக இருந்து வரு கிறது.
564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளத்தில் சுமார் 200 ஏக்கர் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. நிலத்தை அளவீடு செய்து ஆக்கி ரமிப்புகளை அகற்ற வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்துக் குளத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்படாவிட்டால் கல்லணைக் கால் வாய் கோட்டம் மூலம் ஆக்கிரமிப்பு அகற் றப்படும். வட்டாட்சியர் 10.7.23 இல் அளவீடு செய்வார் எனக் கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
உடனடியாக நடவடிக்கை எடுத்துக் குளத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமெனக் கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது.