மயிலாடுதுறை டிச.3- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம்,அரும்பாக்கம், நல்லாடை, முக்கூட்டு, இலுப்பூர், மேட்டுத்தெரு பகுதி வழியாக செல்லும் வீர சோழன் ஆற்றின் ஓரம் வளர்க்கப்பட்டு வரும் தேக்கு மரங்களில் ஏராளமா னவை நவம்பர் 11 அன்று மயிலாடுதுறை மாவட்டத் தில் பெய்த அதீத கனமழை மற்றும் சூறாவளி காற்றில் அடியோடு சாய்ந்து ஆற்றின் குறுக்கே கிடக்கின்றன. 20 நாட்களுக்கு மேலாகி யும், விழுந்து கிடக்கும் விலை உயர்ந்த தேக்கு மரங்களை வனத்துறை யினர் எடுத்துச்செல்ல நடவ டிக்கை எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே உடனடி யாக வனத்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுத்து ஆற்றில் கிடக்கும் மரங்களை வனத்துறை கிடங்குகளுக்கு எடுத்து செல்ல வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.