திருச்சிராப்பள்ளி, ஜூலை 23 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட லால்குடி ஒன்றிய பேரவை சனிக்கிழமை லால்குடி தம்பாச்சியபிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விசா லாட்சி தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட தலைவர் லிங்கராணி துவக்கவுரையாற்றி னார். வேலை அறிக்கையை ஒன்றிய செய லாளர் கோமதி வாசித்தார். சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ் வாழ்த்துரை வழங்கினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன் முறைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து, தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் அத்தி யாவசிய பொருட்கள் அனைத்தையும் வழங்க வேண்டும். லால்குடி ரயில்வே சுரங்கப் பாதையை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற் றது. தலைவராக நகராட்சி கவுன்சிலர் வே. சாரதா, செயலாளராக விசாலாட்சி, பொருளாளராக மணிமொழி உள்பட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாதர் சங்க மாநில செயற் குழு உறுப்பினர் மல்லிகா நிறைவுரையாற்றி னார். முடிவில் மெர்ஸி நன்றி கூறினார்.