districts

திருச்சி விரைவு செய்திகள்

மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.9 - திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் இலவச  வீட்டு மனை பட்டா கேட்டு அகில இந்திய விவசாய  தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒன்றியச் செயலா ளர் கண்ணன் தலைமையில் மணப்பாறை வட்டாட்சியரி டம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாற்றுத்திற னாளிகள் பொறுப்பாளர் இளமாறன், விவசாயத் தொழிலா ளர்கள் சங்க வட்டத் தலைவர் சேதுராமன், துணைத் தலைவர் பத்மினி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஷாஜகான் ஆகியோர் பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியரிடம் மனு  கொடுத்தனர்.


தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வு:  அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

 தஞ்சாவூர், டிச.9 -  தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்றது.  இதில் வெற்றி பெற்றவர் விவரங்களை பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட்டார். இதில், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 11 ஆம் வகுப்பு மாணவிகள் சி.அபிநயா 83 மதிப்பெண்கள், கா. ஹரிணி பிரியா 78 மதிப்பெண்கள், ம.ரோகிணி ஸ்ரீ 74  மதிப்பெண்கள், ரா.தர்ஷினி 70 மதிப்பெண்கள் பெற்றனர்.  இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு  ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வீதம், மொத்தம் 36,000 ரூபாய் ஊக்கத் தொகையாக தமிழக  அரசு வழங்கும். தேர்வில் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி  மற்றும் தமிழாசிரியர்கள் வாழ்த்தினர்.


5 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி துவக்கம்

பட்டுக்கோட்டை, டிச.9 -  தமிழக அரசு பனை மரங்களை காக்கும் விதமாக,  பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்துள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பனை விதை களை பொது இடங்களில் விதைக்க ஊக்கப்படுத்தி வருகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புதுக்கோட்டை உள்ளூர் பஞ்சாயத்தில் 5,000  பனை விதைகள் விதைக்கும் பணிகள் துவங்கின. இதனை  தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் துவக்கி  வைத்தார். இதையடுத்து புதுக்கோட்டை உள்ளூர் பஞ்சா யத்திற்கு உட்பட்ட ஏரி, குளம், அரசுக்குச் சொந்தமான இடங்கள் என பொது இடங்களில் நூறு நாள் பணியா ளர்களை கொண்டு பனை விதைகளை நடவு செய்ய திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்தனர்.