புதுக்கோட்டை, நவ.2 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை அருகே 2 இளைஞர்கள் காட்டுப் பகுதியில் சந்தேகமான முறை யில் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. கந்தர்வக்கோட்டை அருகே அரியா ணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகன் ராஜேஸ் கண்ணா (18). அதே ஊரைச் சேர்ந்தவர் சண் முகம் மகன் முருகானந்தம்(26). இவர்கள் இருவரும் இரு தினங்க ளுக்கு முன்பு இரவில் வேட்டைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆனால், இருவரும் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களிலும் அவர்களது குடும்பத்தினர், உறவி னர்கள் தேடி வந்தனர். அப்போது, அதே ஊரில் உள்ள வனப்பகுதியில் இருவரும் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் ராஜேஸ்கண்ணா, முருகானந்தம் ஆகிய இருவரின் சடலத்தையும் கந்தர்வ கோட்டை போலீசார் கைப்பற்றி விசா ரித்து வருகின்றனர். வேட்டைக்குச் சென்றபோது தனியார் நிலத்தில் இருந்த மின் வேலி யின் மூலம் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்றும், அதன் பிறகு இருவரது உடல்களையும் காட்டுப்பகு தியில் யாரேனும் போட்டு விட்டுச் சென்றிருக்கலாம். இருவரது உடலிலும் அதற்கான காயங்களும் உள்ளன என போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து, கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை கூறுகையில், நடந்துள்ள சம்பவம் குறித்து மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். இறந்தவர்கள் இருவரும் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மரணம் எப்படி நடந்தது என உரிய புலன் விசாரணை செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அரசை வலியுறுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.