districts

img

70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஓய்வூதியம் வழங்க வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி, செப். 20-  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மற்றும் மாநில மாநாட்டு ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் மதிவாணன் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் துளசிராமன் சமர்ப்பித்தார். கூட்டத்தில் வரும் 27 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மாவட்ட மாநாடு மற்றும்  அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி சிவகாசியில் நடைபெற உள்ள மாநில மாநாடு ஆகியவற்றை சிறப்பாக நடத்துவது. 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் இறந்த தேதி அன்றே ஓய்வூதியத்தை நிறுத்தாமல் அந்த மாதம் முழுவதும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநிலச் செயலாளர் எம்.வி. செந்தமிழ் செல்வன் நிறைவுறை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.