districts

img

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரே கழிப்பறையா? இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

மயிலாடுதுறை, செப்.29-  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தியும்,  தற்போது செயல்படும் இடத்திலிருந்து மாற்று இடத்திற்கு மாற்றி  அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில்  வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்  வியா ழனன்று நடைபெற்றது.  சங்கத்தின் கல்லூரி நிர்வாகி ஈஸ்வரன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாவட்டத் தலைவர் மணிபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் தீபா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆதித்யன், லெனின், குத்தாலம் ஒன்றிய தலைவர் பிரகாஷ், ஒன்றி யச் செயலாளர் தவசி ஆகியோர் பேசினர்.  குத்தாலம் மாதிரிமங்கலம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு (அதிமுக ஆட்சி) அரசு கலை  மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி துவங்கப்பட்டது. போதுமான இட வசதி மற்றும்  அடிப்படை வசதிகளு டன்  கூடிய கட்டிடத்தை தேர்வு செய்து கல்லூரியை துவக்காமல் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் கல்லூரி  (சமுதாயக்கூடம்) துவங்கி   200 லிருந்து 300 மாணவர்கள் கல்வி பயின்று வந்த இக்கல்லூரி யில் தற்போது சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

 ஆனால், இக்கல்லூரியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவ, மாணவி கள் மட்டுமின்றி கல்லூரி ஆசிரி யர்களும், அலுவலர்களும் பெரும்  சிரமத்தை நாள்தோறும் அனு பவித்து வருகின்றனர். கடும் இட நெருக்கடி ஒரு புறம் என்றால் ஆண், பெண் மாணவர்கள், ஆசிரியர் களுக்கு என எல்லோருக்கும் ஒரே  கழிப்பறை தான் உள்ளது. மேலும்  தண்ணீர் வசதியும் பெரும் கேள் விக்குறியாகவே இருப்பதாக கல்லூரி மாணவர்கள் வேதனை யுடன் கூறுகின்றனர்.  அடிப்படை வசதிகளை செய்து  தர வேண்டும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் , பேருந்து  வசதி வேண்டும் என பலமுறை  இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி யும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வியாழனன்று  கல்லூரியிலிருந்து கோரிக்கை களை முழங்கியவாறு 400-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் பேரணி யாக சென்று  குத்தாலம் வட்டாட்சி யர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அரசு அதிகாரிகள் அக்டோபர் 13-க்குள்  மாற்று இடம்  ஏற்பாடு செய்வதாக வும், புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டவுள்ளதாகவும் உறுதியளித்த தன் பேரில்  தற்காலிகமாக போராட்  டம் கைவிடப்பட்டது.  உறுதியளித்த தேதிக்குள் கோரிக்கைகளை  நிறைவேற்ற வில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடு வோம் என மாணவர் சங்க நிர்வாகி கள் கூறினர்.