பொள்ளாச்சி. பிப்.8- பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மறந்து போன பழைய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந் தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பெத்தநாயக்கனூர் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 300 மாணவர்கள் பயின்று வரு கின்றனர். இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் படிப்பு மட்டும் அல்லாது விளையாட்டு, கிராமிய கலைகள், மரம் வளர்ப்பு, வாசகர் வட்டம் என பல்வேறு விதமான நடவ டிக்கைகளை மாணவர்களுக்கு போதித்து வருகின்ற னர். இதன் ஒரு பகுதியாக ஆண்டு தோரும் மரபு விளை யாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக பள்ளியில் தோரணம் கட்டி பொங்கல் வைத்து கும்மி அடித்து, கண்ணாம்பூச்சி, கொல கொலையா முந்திரிக்கா, டயர் வண்டி ஓட்டுதல், உரி அடித்தல் போன்ற விளையாட்டு களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இதனை உற்சாகமாக மாணவர்கள் விளையாண்டு மகிழ்ந்த னர்.