districts

img

பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி, மடிக்கணினி வழங்கிடுக! மாதர் சங்க மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 6- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவெறும்பூர் தாலுகா மாநாடு தோழர் மைதிலி சிவராமன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு யமுனாதேவி தலைமை வகித்தார். நித்யா வரவேற்றார். புற நகர் மாவட்ட தலைவர் லிங்கராணி துவக்க உரையாற்றினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தெய்வநீதி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புறநகர் மாவட்ட செயலாளர் (பொறுப்பு) கோமதி சிறப்புரையாற்றினார். 100 நாள் வேலையை பேரூராட்சி, நகராட்சி  பகுதிகளுக்கு விரிவு படுத்த வேண்டும். துவாக்குடியில் உள்ள தாலுகா அரசு  மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். தாலிக்கு தங்கம் திட்டத்தை  நடைமுறைப் படுத்த வேண்டும். துவாக்குடி நகராட்சி பகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய நூல கம் அமைக்க வேண்டும். பள்ளி மாண வர்களுக்கு மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தாலுகா தலைவராக யமு னாதேவி. செயலாளராக மல்லிகா குமார். பொருளாளராக கூத்தைபார் பேரூராட்சி கவுன்சிலர் நித்யா, துணை செயலாளர்களாக கிரிஜா, பானு அமீர், துணைத்தலைவராக இந்தி ராணி உள்பட 17 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் அ.மல்லிகா நிறைவுரையாற்றினார். கிரிஜா நன்றி கூறினார்.