மயிலாடுதுறை, அக்.29 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யில் 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடை பெற்றது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக் கால் ஆகிய 3 மாவட்ட மீனவர்களின் ஆலோ சனை கூட்டத்தில் 3 மாவட்டங்களைச் சார்ந்த 21 கிராம மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படை மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நவம்பர் 11 ஆம் தேதி தொழில் மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மயிலாடு துறை, காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையையும், ஒன்றிய அரசையும் கண்டித்து கடலூர் முதல் கன்னி யாகுமரி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களும் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங் களை நவம்பர் 11 ஆம் தேதி நடத்துவது. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று அனைத்து மாவட்ட மீனவர்களும் தொழில் மறியல் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப் பட்டுள்ளது.