மெலட்டூர், ஆக.24 - கொத்தங்குடியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி யில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. கோடைபருவ நெல் கொள்முதலை முன்னிட்டு திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம், சீசன் முடிந்ததால் மூடப் பட்டது. தற்போது கொத்தங்குடி ஊராட்சியில் எடக்குடி, உதார மங்களம், வெண்ணுக்குடி, குண்டூர், சாத்தனூர், வெண்ணுக் குடி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 600 ஏக்கரில் நெல் சாகு படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நெல் கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாரானதால் சில விவசாயிகள் நெல்லை அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனர். சில விவ சாயிகள் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், அறுவடை செய்த நெல் மணிகளை என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளனர். அறுவடை செய்த நெல்லை சில விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன் கொட்டுவதும், பின்னர் நிலையம் திறக்காததால் அள்ளுவதுமாக உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நெல் கொள்முதல் நிலை யத்தை திறக்க வேண்டுமென்று விவசாயிகளும், ஊராட்சி மன்றத் தலைவர் பழனியும் கோரிக்கை விடுத்துள்ளார்.