மயிலாடுதுறை, ஜூன் 22 - காவிரி ஆணையத்தின் தலைவர் சட்டத்திற்கு விரோதமாக மேகதாது வில் அணை கட்டுவது குறித்து விவாதிப் போம் என பேசியதை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்ட அனு மதிக்க கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி யும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் புதன் கிழமை கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டி னம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றன. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்ட தலைவர் எம்.செல்லப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) மாநில செயலாளர் சாமி.நடரா ஜன், மாவட்ட செயலாளர் எஸ்.துரை ராஜ், தமிழ் மாநில விவசாய தொழிலா ளர் சங்கம் (சிபிஐ) மாவட்ட செயலா ளர் இரெ.இடும்பையன், அனைத்து இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்ட செயலாளர் பி.வீரராஜ் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் ரயிலடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் வீரமோ கன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் கே.முகமது அலி கண்டன உரையாற் றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் முத்து உத்ராபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சி. கிருஷ்ணன், கே.அபிமன்னன், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வசந்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெய பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களின் சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் கருப்புக் கொடி ஏந்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம் கண்டன உரையாற்றினார். திருவையாறு பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வி கண்டன உரையாற்றினார்.
கும்பகோணம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கருப்புக் கொடியுடன் கும்பகோ ணம் காந்தி பார்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பாபநாசம்
பாபநாசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் தர்மராஜன் தலைமை வகித் தார். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை
கறம்பக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி.ச. ஒன்றியத் தலைவர் எம்.பழனியப்பன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், விச மாவட்டச் செயலாளர் எஸ். பொன்னுச்சாமி உள்ளிட்டோர் பேசி னர். நாகுடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வி.ச. அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் எம்.நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். வி.ச.மாநில பொரு ளாளர் கே.பி.பெருமாள், மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன் மற்றும் கரு.ராமநாதன், ராமசாமி உள்ளிட் டோர் பேசினர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கடைத்தெருவில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி. வெங்கட்ராமன் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து கண்டன உரையாற்றினார். கீழ் வேளூரில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு வடகரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். விதொச மாநிலக் குழு உறுப்பினர் மீரா.மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்
வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.வேணு தலைமை வகித்தார்.
திருவாரூர்
திருவாரூர் தைலம்மை திரைய ரங்கம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய இப் போராட்டத்திற்கு ஜி.பவுன்ராஜ், புலிகேசி ஆகியோர் தலைமை வகித்தனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.உலகநாதன் தலைமை வகித்தனர்.
குடவாசல்
குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் குடவாசல் ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினார். இதில், சிபிஎம், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு, செயற்குழு, கிளை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.