districts

img

விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, பிப்.18-  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய கமிட்டி சிறப்பு பேரவை செவ்வாய்க்கிழமை திருவெள்ளறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்டப் பொருளாளர் ராமநாதன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என். சுப்பிரமணியன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் பூமாலை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  கூட்டத்தில் திருவெள்ளறை பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். வரத்து வாய்க்கால்கள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து நீர் ஆதாரத்தை உருவாக்கி தர வேண்டும். இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செல்லப்பெருமாள் நன்றி கூறினார்.