districts

img

வாலிபர் சங்கம் நடத்திய மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா

மயிலாடுதுறை, ஜன.16- மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் அரு கேயுள்ள வடகரை அரங் கக்குடி கிராமத்தில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில் மக்கள் ஒற்றுமை யை வலியுறுத்தி சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.  சங்கத்தின் செம்பை ஒன்  றிய தலைவர் அனிஸ் ரஹ்  மான் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சீனிவாசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகன், மாவட்டத் தலைவர் ஐயப்பன், முன்  னாள் மாவட்ட துணைச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், ஒன்றியச் செயலாளர் சபீர் அஹமது, ஒன்றியப் பொரு ளாளர் கபிலன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற  விழாவில், இஸ்லாமிய பெண்கள் பொங்கல் சமைத்து கொண்டாடினர். பின்னர்  நடைபெற்ற கோலப் போட்டி, லக்கி கார்னர், சிறு வர், இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளி லும் பங்கேற்றனர். போட்டி களில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. அனைத்து சமய மக்க ளும் ஒன்றுகூடி இவ்விழா வை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினரை அப்பகுதி ஜமாத் தார்கள், பொதுமக்கள் பாராட்டினர்.