districts

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருச்சிராப்பள்ளி, மே 8 - தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற  தலைவர், ஆயிரம் ஆயிரம் தொழிலா ளர்களை புரட்சிகர இயக்கத்தில் ஈர்த்த  தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நினைவு  தின நிகழ்ச்சி திருச்சியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.  சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்  குழு சார்பில் ஞாயிறன்று சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் சிஐடியு  மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கரா ஜன், சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கட்டுமான சங்க மாவட்ட  செயலாளர் சந்திரசேகர், எடமலைப் பட்டிபுதூரில் கட்டுமான சங்க மாவட்ட  தலைவர் சேது, கல்யாணி, தென்னூரில்  உள்ள மின்வாரிய அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு  கோட்ட செயலாளர் ராதா, திரு வெறும்பூர் கடைவீதியில் தரைக்கடை  சங்க மாவட்ட துணை தலைவர் கணே சன், மப்சல் பஸ் டெப்போ அருகில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணா நிதி, மாவட்ட தலைவர் சீனிவாசன், மத்திய பேருந்து நிலையம் அருகில் தரைக் கடை சங்க அப்துல்லா, புங்கனூரில் தரைக்கடை சங்க மாவட்ட பொரு ளாளர் உலகநாதன் ஆகியோர் தலை மையில் நடைபெற்றது.  இதில் தோழர் வி.பி.சிந்தன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. சிஐடியு, கட்டுமானம் மற்றும் தோழமை சங்கத்தினர் கலந்து கொண்டனர்

கரூர்
சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நினைவு தின கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தோழர்  வி.பி.சிந்தன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னார். கரூர் மாவட்ட செயலாளர் மா. ஜோதிபாசு, சிஐடியு மாவட்ட செயலா ளர் சி.முருகேசன், கரூர் மாநகர செயலா ளர் தண்டபாணி, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி ஆர்.ஹோசிமின், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ப.சரவணன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்
தோழர் வி.பி.சிந்தன் 35 ஆம் ஆண்டு  நினைவு தினம் மற்றும் மருந்து விற்பனை  பிரதிநிதிகள் சங்க 55 ஆம் ஆண்டு அமைப்பு தினக் கொடியேற்று நிகழ்ச்சி,  தஞ்சை சிஐடியு அலுவலகத்தில் மாவட்ட துணை செயலாளர் கே.பால முருகன் தலைமையில் நடைபெற்றது.  சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் வி.பி.சிந்தன் உருவப் படத்திற்கு மலர்தூவி புகழஞ்சலி உரை யாற்றினார். சிஐடியு சங்கக் கொடியை மாவட்ட துணைத் தலைவர் த.முருகே சன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கக் கொடியை சங்கத்தின் தலை வர் முருகேசன் ஆகியோர் ஏற்றி வைத்த னர்.  நிகழ்ச்சியில் முறைசாரா தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என். பேர்நீதி ஆழ்வார், அரசு போக்குவரத்து மத்திய சங்க தலைவர் காரல் மார்க்ஸ், விரைவுப் போக்குவரத்து சங்கம் செங்குட்டுவன், அரசு போக்குவரத்து சங்க பொருளாளர் ராமசாமி, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க பொரு ளாளர் குருநாதன், துணைச் செயலாளர்  ராமச்சந்திரன், சாலைப் போக்குவரத்து சங்க மாநிலக் குழு உறுப்பினர் பரத்ராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.