புதுக்கோட்டை, செப்.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி வியாழ னன்று காலமானார். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப் புகள் அவருக்கு அஞ்சலி செலுத்தி னர். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்க ளில் பல்வேறு இடங்களில் அஞ்சலி கூட்டம் மற்றும் இரங்கல் பேரணிகள் நடைபெற்றன. கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற புக ழஞ்சலி கூட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்ன துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப் பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த. செங்கோடன், மதிமுக மாவட்டச் செய லாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, துணை மேயர் லியாகத் அலி, விசிக மாவட்டச் செயலாளர் வெள்ளை நெஞ்சன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், முஸ்லீம் லீக் அஸ்ரப் அலி, மனிதநேய மக்கள் கட்சி அப்துல் கனி, சிபிஐ (எம்எல்) வளத்த னர், ஓய்வூதியர் சங்கம் சார்பில் அ. மணவாளன், தமுஎகச சார்பில் கி. ஜெயபாலன், அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் எஸ்.தேவமணி ஆகி யோர் புகழஞ்சலி உரை ஆற்றினர். திமுக மாநகரச் செயலாளர் ஆ. செந்தில், விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.
அன்னவாசலில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், ஒன்றி யச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, திமுக நகரச் செயலாளர் அ.முகமது நிஷா, சிபிஐ ஒன்றியச் செயலாளர் நாக ராஜன், விசிக ஒன்றியச் செயலாளர் தீனா, காங்கிரஸ் சார்பில் சஞ்சய் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை ஆற்றினர். ஆலங்குடியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.வடிவேல் தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர் கே.பி.கே.டி. தங்கமணி, மதிமுக சார்பில் வழக்கறி ஞர் ராஜா, சிபிஐ ஒன்றியச் செயலா ளர் திலகர், காங்கிரஸ் சார்பில் அரங்கு ளவன், சிபிஐ(எம்எல்) பாஸ்கர், வாச கர் வட்டம் சார்பில் பாபுஜான், சிபிஎம் நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிர மணியன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர். அரிமளத்தில் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.அடைக்கப்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் ஆர்.வி.ராமையா, மூத்த தோழர் ஆர்.வெள்ளைச்சாமி உள்ளிட் டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி தெப்பக்குளம் தபால் நிலை யம் அருகில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து அமைதி ஊர்வலமாக தேவர் ஹால் வழியாக மரக்கடையை வந்தடைந்த னர். அங்கு வைக்கப்பட்டிருந்த தோழர் சீத்தாராம் யெச்சூரியின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத் தினர். பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித் தார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மூத்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், திமுக மேயர் அன்பழகன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வ ராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் சிவா, ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சுரேஷ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரெக்ஸ், இந்திய முஸ்லிம் லீக் அபிபுர் ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமார்பன், கனியமுதன்,. தமி ழாதன், புல்லட் லாரன்ஸ், விவசாயி கள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் திருவெறும்பூரில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் திரு வெறும்பூர் ஒன்றியச் செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். இதில் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன், மூத்த தோழர்கள் கே.வி.எஸ் இந்துராஜ், கே.சி. பாண்டியன், திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், அதிமுக பகுதி செயலாளர் பாஸ்கரன் மற்றும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். மணப்பாறை ஒன்றிய குழு சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம் பரம் தலைமை வகித்தார். முன்னதாக இரங்கல் ஊர்வலம் மணப்பாறை காமராஜர் சிலையிலிருந்து துவங்கி பெரியார் சிலை அருகே முடிவடைந் தது. வையம்பட்டியில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் வையம்பட்டி ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். இதில் ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட னர்.
துறையூரில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஆனந்தன் தலைமை வகித் தார். மருங்காபுரியில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். கரூர் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில் பேருந்து நிலையம் அருகே நினைவேந்தல் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சங்கர நாரயணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ராஜூ, ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் உள்ளிட்ட பலர் பேசினர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழு சார்பில் பழைய ஜெயங்கொண்டம், மாயனூர் கிளைகளில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஜி.பார்த்தி பன் தலைமை வகித்தார். தோகை மலை ஒன்றியக் குழு சார்பில் ஒன்றியச் செயலாளர் ஆ.சுப்பிரமணி யன் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அரசு மருத்துவமனை அருகில் இருந்து ஊர்வலமாக வந்து தோகைமலை பேருந்து நிலையம் முன்பு தோழர் சீத்தாராம் யெச்சூரி உருவப் படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்தி வேல், திமுக பொதுக்குழு உறுப்பினர் சி.தர்மர் விசிக ஒன்றியச் செயலாளர் ராஜ்குமார், அதிமுக மணி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் கடவூர் ஒன்றியத்திற்குட் பட்ட தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடந்த நினைவேந்தல் கூட்டத் திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் சிபிஎம் மாநக ரச் செயலாளர் செந்தில் குமார் தலை மையில் தோழர் சீதாராம் யெச்சூரி உருவப் படத்திற்கு அனைத்து கட்சியி னரும் அஞ்சலி செலுத்தி, அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், மாமன்ற உறுப்பினர் செல்வம், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், சாலை போக்குவரத்து சம்மேளன மாநிலப் பொருளாளர் பார்த்தசாரதி, திமுக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், துணை மேயர் தமிழழகன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் லோகநாதன், மதிமுக மாநகரச் செயலாளர் ஸ்டா லின், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செய லாளர் கண்ணையன், விசிக மாவட்டச் செயலாளர் முல்லைவளவன் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர். தேவனாஞ்சேரி கடை வீதியில் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமையில் அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. சிபிஎம் செயற்குழு உறுப்பி னர் அருளரசன், மாவட்டக் குழு உறுப் பினர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில் திருபு வனத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவபாரதி தலைமையிலும் நடை பெற்றது.
நாச்சியார்கோவிலில் ஒன்றியச் செயலாளர் பழனிவேல் தலைமை யில் நாச்சியார்கோவில் பெரியார் சிலையில் இருந்து கடைத்தெரு வரை அமைதி ஊர்வலமும் கடைத்தெரு வில் இரங்கல் கூட்டமும் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் திராவிட விடு தலைக் கழக பொறுப்பாளர் சோலை மாரியப்பன், சங்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
திருவையாறு
கட்சியின் திருவையாறு ஒன்றியக் குழு சார்பாக, திருவையாறு தேரடித் தெருவில் நடைபெற்ற இரங்கல் கூட்டத் திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரி சாமி இரங்கல் உரையாற்றினார்.
திருவாரூர்
அகில இந்திய பொதுச் செயலா ளர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு செவ்வஞ்சலி கூட்டம், திருவாரூர் மாவட்டம் மாவூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றிய குழு சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.இடும்பை யன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் இரங்கல் உரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கோமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆர்.சிவப்பிரகாசம், விடு தலை சிறுத்தை கட்சியின் நாகை தொகுதி பொறுப்பாளர் என்.டி.இடி முரசு மற்றும் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத் தினர். இதேபோன்று, மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்கள் மற்றும் கிளைகளில் இரங்கல் கூட்டம் நடை பெற்றது.
மன்னார்குடி
மன்னார்குடியில் நடந்த பேரணி மற்றும் கூட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் தலைமை வகித்தார். திமுக சார்பில் கோவி அழகிரி, திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், விசிக சார்பில் ரமணி, சிபிஐ சார்பில் வீரமணி, காங்கிரஸ் சார்பில் ஆனந்த், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் நிர்வாகி ரசாக் உள்ளிட் டோர் பேசினர். பேரணியில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த 500 பேர் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோவில்
மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோவிலில் இரங்கல் கூட்டம் வெள்ளியன்று மாலை கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது. கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கண்ணகி, வீ.எம்.சரவணன், திமுக சார்பில் பரசலூர் ஊராட்சி மன்றத் தலைவர் த.சண்முகம், சிபிஐ ஒன்றியச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, சிபிஐஎம்எல் மாவட்டச் செய லாளர் குணசேகரன், ஒன்றியச் செய லாளர் பால்ராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் கொளஞ்சி, ஒன்றியச் செயலாளர் சுந்தரவடிவேல், தேமுதிக ஒன்றியச் செயலாளர் ராஜா ஆகி யோர் இரங்கல் உரையாற்றினர்.
அரியலூர்
அரியலூர் அண்ணா சிலை அருகில் அனைத்து கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோ வன் தலைமை வகித்தார். வழக்கறி ஞர் துரை.அருணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு. சின்னப்பா, திமுக மாவட்ட துணை செயலாளர் சி.சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செய லாளர் அங்கனூர் சிவா, காங்கிரஸ் கட்சி நகரச் செயலாளர் சிவக்குமார், திராவிட கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செய லாளர் கோபாலகிருஷ்ணன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் தண்ட பாணி ஆகியோர் இரங்கல் உரை யாற்றினர்.
திருமானூர்
திருமானூரில் ஒன்றியக் குழு சார்பில் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.அரு ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். பி.சாமிதுரை, ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.