districts

img

பணி நீக்க உத்தரவை ரத்து செய்க! மின்வாரிய கூட்டுக்குழு தொடர் போராட்டம் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 31 - தமிழ்நாடு மின்வாரிய திருச்சி பெருநகர் வட்டம் நகரிய கோட்டத்தில் பணிபுரியும் மின்வாரிய உதவி பொறியாளர், இரவு நேரத்தில் பெறப்பட்ட மின்னக புகாரை சரி  செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும் அவரை  பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மின்வாரிய கூட்டுக்குழு சார்பில் தென்னூ ரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியா ளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட் டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். பொறியாளர் சங்க நரசிம்மன், பாலாஜி, ஐக்கிய சங்க கண்ணன், டி.என். இ.பி.இ.எப். சிவச்செல்வன், டி.என்.இ.பி.டபுள்யு.எப். பெருமாள், அதிமுக அண்ணா துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலைக்குள் பணியிட உத்தரவை ரத்து செய்து, அதே இடத்தில் பணி செய்ய அவருக்கு உத்தரவு வழங்க வேண்டும். இல்லையெனில் ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் என தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டது. இதில் அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.