districts

img

திருச்சி ஜி-கார்னரில் விரைவில் சுரங்கப் பாதை அமைக்க ஏற்பாடு துரை.வைகோ எம்.பி., பேட்டி

திருச்சிராப்பள்ளி, ஜன.25 - சென்னை - திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி பொன்மலை ‘ஜி’  கார்னர் பகுதியில், மேம்பாலமோ, சுரங்கப் பாலமோ இல்லாததால் அடிக்கடி விபத்து கள் நிகழ்ந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனை மட்டுமல்லாது, இந்த சாலையை 15-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தினம்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்த சாலைக்கு உரிய தீர்வு ஏற்படவில்லை. இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ கவனத்திற்கு, சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றனர். அதையடுத்து, திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் சனிக்கிழமை துரை. வைகோ எம்பி, திருச்சி ரயில்வே கோட்ட  மேலாளர் அன்பழகன், தேசிய நெடுஞ்சாலை  துறை ஆணையம் திட்ட இயக்குநர் பிரவீன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பின்னர் திருச்சி எம்.பி., துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி பொன்மலை ஜி கார்னர் சாலை பிரச்சனை குறித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை  ஆணைய உயர் அதிகாரி களுடன் கலந்து பேசினேன். அப்போது நிலம் வழங்குவ தற்கு ரயில்வே நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரி வித்தது. நிதியில் ஏதும் பிரச் சனை வராது என்று நினைக் கிறேன். விரைவில் பொன்மலை ‘ஜி’ கார்னர்  பகுதியில் மேம்பாலமோ அல்லது சுரங்கப் பாலமோ அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்வேன்.  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் பட்டியலின நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது  குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டு உள்ளன. என்னை பொறுத்தவரை உரிய விசா ரணை இல்லாமல், ஆதாரம் இல்லாமல் சிபிசி ஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை அவர்கள் தவறான நடவ டிக்கை எடுத்திருந்தால் தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படும். உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெறு வதால், நீதிமன்றம் வழங்குவதே இறுதித் தீர்ப்பு. நீதிமன்றத்திற்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், நிச்சயமாக அவர்கள் வழக்கை சிபிஐக்கு மாற்றுவார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.